விஜயபாஸ்கரும் இந்தக் காரில் தானே வந்தாரு..?

ரகுபதி
ரகுபதி

சர்ச்சைகள் எதிலும் சிக்காத சட்டத்துறை அமைச்சர் ரகுபதியையும் சிக்கலில் மாட்டிவிட்டிருக்கிறார்கள். ரகுபதி புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வந்தால் தனது உள்ளூர் போக்குவரத்துக்கு இன்னோவா காரைத்தான் பயன்படுத்துவார். அவருக்காக மாவட்ட நிர்வாகத்தால் அனுப்பப்படும் இன்னோவா காரைத்தான் ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் மாவட்ட அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கருக்கு அனுப்புவார்களாம். அப்போதெல்லாம் கிளம்பாத சர்ச்சை இப்போது கிளம்பி இருக்கிறது. ரகுபதி பயணித்த அந்த இன்னோவா கார் இன்னும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவுசெய்யப்படவில்லை என்பது தான் அந்த திடீர் சர்ச்சை. முறைப்படி பதிவு செய்யப்படாத போதும் அந்தக் காரின் நம்பர் பிளேட்டில் பதிவு எண் எழுதப்பட்டு இருந்ததாம். இதெப்படி என்று கேள்வி எழுப்புபவர்கள், “சட்டத்துறை அமைச்சரே சட்டத்தை மீறலாமா?” என்று ரகுதிபதியின் தலையைப் போட்டு உருட்டிவிட்டார்கள். இதில் நாம் ஏதாவது பதில் சொல்லப்போய் புதிதாக ஒரு பிரச்சினை கிளம்பிவிடக்கூடாது என்று சுதாரித்த ரகுபதி, தற்போது அந்தக் காரில் பயணிப்பதையே தவிர்த்துவிட்டாராம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in