அதற்காகத்தான் அந்த ‘கண்டுகொள்ளல்!’

ரகுபதி
ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பிடிஓ) 18 பேர் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் அவர்கள் யாருமே புதிய இடத்தில் பணியில் சேரவில்லையாம். சம்பந்தப்பட்ட பொறுப்பு அதிகாரிகளைக் கேட்டால், “அமைச்சரைப் பாருங்கள்” என்கிறார்களாம். “நம்ம மாவட்டத்துல ரெண்டு அமைச்சர் இருக்காங்களே... யாரைப் பார்க்க?” என்றால், “அதுல தான் ஒருத்தர இன்னொரு மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சரா அனுப்பியாச்சுல்ல... இப்ப நம்ம மாவட்டத்துக்கு அமைச்சர்னா அது ரகுபதி மட்டும் தான். அவரப் பார்த்துட்டு வந்து சார்ஜ் எடுத்துக்கோங்க” என்கிறார்களாம் அதிகாரிகள். மாவட்டத்தின் இன்னொரு அமைச்சரான ஜூனியர் மெய்யநாதன் எக்காரணம் கொண்டும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்துக்குள் தலையிடக் கூடாது என நினைக்கிறாராம் சட்ட அமைச்சர் ரகுபதி. அந்த வகையில் பிடிஓ-க்களையும் அமைச்சர் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவே இந்த ‘கண்டுகொள்ளல்’ ஏற்பாடாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in