சஞ்சலத்தில் சட்ட அமைச்சர்!

சஞ்சலத்தில் சட்ட அமைச்சர்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சீனியர் அமைச்சர் ரகுபதிக்கும் ஜூனியர் அமைச்சர் மெய்யநாதனுக்கும் இடையில் நடக்கும் பனிப்போர் அறிவாலயம் அறிந்த ரகசியம். இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி புதுக்கோட்டையில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், ரகுபதியையும் மேடையில் வைத்துக் கொண்டு மெய்யநாதனை மட்டும் மெய்சிலிர்க்கப் புகழ்ந்து பேசினார். இதனால், ஜூனியரான மெய்யநாதனை உச்சத்தில் தூக்கிவைத்துப் பேசிவிட்டு தன்னைப் பற்றி பெரிதாக ஏதும் பேசவில்லையே முதல்வர் என ரொம்பவே சஞ்சலப்பட்டுப் போனாராம் சட்ட அமைச்சர் ரகுபதி. இந்த நிகழ்வுக்குப் பிறகு தனது தொகுதிக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளில் மட்டும் தலைக்காட்டும் ரகுபதி, அதைத்தாண்டி மாவட்டத்தில் வேறெங்கும் செல்வதை தவிர்த்து வருகிறாராம். வெளி மாவட்டங்களுக்கு துறை சார்ந்த பணிகளுக்காகச் செல்வதையும் ரகுபதி வெகுவாகக் குறைத்துக் கொண்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். அதேசமயம், ரகுபதியை ஓரங்கட்டும் விதமாக மெய்யநாதனை முதல்வர் தூக்கிவைத்துப் பேசியதால் மெய்யநாதன் கோஷ்டி ஆனந்தத் துள்ளலில் இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in