பொல்லாப்பை விரும்பாத பொன்முடி!

பொல்லாப்பை விரும்பாத பொன்முடி!

முன்பு கள்ளக்குறிச்சியும் விழுப்புரம் மாவட்டத்துக்குள் தான் இருந்தது. அதற்கும் சேர்த்து அமைச்சர் பொன்முடிதான் நாட்டாமையாக இருந்தார். ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாகப் பிரிந்த பிறகு அங்குள்ள திமுகவினர் பொன்முடியின் வருகையை அவ்வளவாய் விரும்பவில்லை. கட்சியினரின் இந்த எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்ட திமுக தலைமையும், பொன்முடியை ஒதுக்கிவிட்டு திருவண்ணாமலை திருமகனார் எ.வ.வேலுவை கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சராக அனுப்பியது. இதில் பொன்முடிக்கு ஏக வருத்தம். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவி ஸ்ரீமதி இறப்பால் அண்மையில் கலவரம் வெடித்தபோது, அருகிலிருந்தும் அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லையாம் பொன்முடி. “அந்த மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சர் இருக்கும்போது நாம் ஏன் பொல்லாப்பைத் தேடிக்கணும்” என்று சொல்லி அமைதியாகவே இருந்துவிட்டாராம். இதனால் திமுக தலைமைக்கு அவர் மீது ஏக வருத்தம் என்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in