‘பொறுப்பு எம்எல்ஏ’ அமைச்சர் பன்னீர்செல்வம்!

 ‘பொறுப்பு எம்எல்ஏ’ அமைச்சர் 
பன்னீர்செல்வம்!
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமிப்பது திராவிடக் கட்சிகளின் பாணி. அதேபோல் முதல்முறையாக, ‘பொறுப்பு எம்எல்ஏ’ என்ற பதத்தையும் திமுககாரர்கள் இப்போது அமலுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். கடலூர் மேயர் வேட்பாளராக திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டவர் சுந்தரி. ஆனால் இவரை வீழ்த்த தொகுதி எம்எல்ஏ-வான ஐயப்பன் பகிரங்கமாகவே காய்நகர்த்தினார். இதனையடுத்து ஐயப்பனை கட்சியிலிருந்தே நீக்கியது திமுக தலைமை. இதைத் தொடர்ந்து அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் கடலூர் தொகுதியையும் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்து கவனித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி கூடிய மாமான்றக் கூட்டத்தில், “கடலூர் தொகுதிக்கும் பொறுப்பு எம்எல்ஏ-வாக அமைச்சர் அண்ணன் எம்.ஆர்.கே இருக்கிறார்” என்று மேயர் சுந்தரி பொத்தாம் பொதுவில் போட்டு உடைத்துவிட்டாராம். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அமைச்சரின் விசுவாசிகள், “இதென்னடா இந்தம்மாவோட வம்பாப்போச்சு... இதையெல்லாமா வெளிப்படையாச் சொல்லிக்கிட்டுத் திரிவாங்க” என்று அலுத்துக் கொண்டார்களாம்.

Related Stories

No stories found.