மகன் திருமணம்... லட்சம் பேருக்கு கறிவிருந்து!

 பி. மூர்த்தி
பி. மூர்த்தி

பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தியின் சொந்த ஊர் மதுரை அருகே வெளிச்சநத்தம். கடந்த ஆண்டு, இந்த ஊரைச் சேர்ந்த இன்னொரு பி.மூர்த்தி என்பவரின் மகன், தான் காதலித்த பெண்ணை கலப்பு மணம் புரிந்திருக்கிறார். இதைத் தவறாகப் பரப்பிய சிலர், அமைச்சர் மூர்த்தியின் மகன் தியானேஷ் கலப்புத் திருமணம் செய்துகொண்டதாக செய்தி பரப்பினார்கள். அந்த சமயத்தில் மகனுக்கு பெண் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் மூர்த்தி, இந்த வதந்தியால் ரொம்பவே அப்செட் ஆனார். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தனது மகனுடன் செய்தியாளர்களைச் சந்தித்து தன்னிலை விளக்கமும் கொடுத்தார் மூர்த்தி. ஒரு வழியாக அந்தப் பிரச்சினைகள் எல்லாம் ஓய்ந்து, மகன் தியானேஷுக்கு பெரிய இடத்து சம்பந்தம் பேசி முடித்திருக்கிறார் மூர்த்தி. வதந்தி பரப்பியவர்களின் வாய்களை எல்லாம் அடைக்கும் விதமாக ஊரே மெச்சும் வகையில் மகன் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருக்கும் மூர்த்தி, கறி விருந்து மட்டுமே ஒரு லட்சம் பேருக்கு போடவிருக்கிறாராம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in