ஆதிக்கம் செலுத்தும் ஆசிம் ராஜா!

ஆசிம் ராஜா
ஆசிம் ராஜா


பால்வளத் துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா ஆவடி மாநகராட்சியில் மண்டலக்குழு தலைவராக இருக்கிறார். ஆனாலும் மேயருக்கும் கூடுதலாகவே அனைத்திலும் அதிகாரம் செலுத்துகிறாராம் ஆசிம். மாநகராட்சி தொடர்பான டெண்டர்கள் உள்ளிட்ட நிதி சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் ஆசிம் கைகாட்டுதல்படி தான் நடப்பதாகச் சொல்கிறார்கள். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும், “எதுக்கும் அவரையும் பாத்துருங்க” என்று அதிகாரிகளே ஆசிம் இருக்கும் அறையைக் கைகாட்டுகிறார்களாம். மாநகராட்சி சம்பந்தப்பட்டவை மட்டுமல்லாது சில நேரங்களில் கட்சிக் கூட்டத்தையும் மாநகராட்சியிலேயே நடத்துகிறாராம் ஆசிம். இதையெல்லாம் பட்டியலிட்டு ஆட்சியரிடம் அதிமுகவினர் மனு கொடுத்தும் ஆசிம் ராஜாவின் அதிகாரத் தோரணை குறையவில்லையாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in