இந்த ஆட்சியர் எனக்கு வேண்டாம்!

 நாசர்
நாசர்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரான டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமைச் செயலாளர் இறையன்புவின் குட் புக்கில் இருப்பவராம். இவருக்கும் மாவட்ட அமைச்சர் நாசருக்கும் ஏழாம் பொறுத்தம் என்கிறார்கள். அண்மையில் ஆவடியில் நடைபெற்ற ஜமா பந்தியில் பட்டா கேட்டு மனுக்கள் குவிந்தன. அதன் பேரில் ஆவடி வட்டாட்சியர் சிவகுமார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்து சிவகுமாரை அங்கிருந்து மாற்றச் சொன்னாராம் நாசர். ஆனால், ஆட்சியர் அதை பொருட்படுத்தவில்லையாம். இதை தனது கௌரவப் பிரச்சினையாக எடுத்துக்கொண்ட நாசர், விஷயத்தை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று தாசில்தார் சிவகுமாரை மாற்றினாராம். அத்துடன், புதிதாக வந்த தாசில்தாரை வைத்து ஒரே மூச்சில் மூவாயிரம் பேருக்கு பட்டா வழங்கி ஆட்சியரை வெறுப்பேற்றினாராம் அமைச்சர். ஆனாலும் அமைதிகொள்ளாத மனிதர், “ஒத்துவராத ஆட்சியரை வெச்சுக்கிட்டு என்னால ஒண்ணும் பண்ணமுடியாது. அதனால தயவுசெஞ்சு இவரை இங்கிருந்து மாத்திடுங்க” என்று தலைமையிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறாராம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in