உழவர் நலத்துறையா... உறவுகள் நலன் துறையா?

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன் துறையானது  முழுக்க முழுக்க வன்னியர்களால் நிர்வகிக்கப்படும் துறையாகவே மாறிக் கொண்டிருப்பதாக பலமான குற்றச்சாட்டுக் கிளம்பியிருக்கிறது.

இத்துறையின் அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வன்னியர் என்பதால், வேளாண் துறை செயலாளர் தோட்டக் கலைத்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வன்னியர்களே நிறைத்திருக்கிறார்களாம். இன்னும் ஒருபடி மேலாக, அரசால் நியமிக்கப்படும் தனது உதவியாளரைக்கூட வன்னியராகப் பார்த்து டிக் செய்திருக்கிறார் அமைச்சர்.  துறையில் உள்ள இன்னும் சில முக்கிய அதிகாரிகளும் வன்னியர்களாக இருக்க வேண்டும் என அமைச்சர்  பன்னீர்செல்வம் பிரியப்படுவதாகக் கருதிக்கொண்டு துறையின் முக்கிய பதவிகளில் வன்னியர்களை தேடிப்பிடித்துக் கொண்டுவந்து உட்கார வைக்கிறார்களாம் மேல்மட்ட அதிகாரிகள். இதனால்  திறமை இருந்தும் உரிய முக்கியத்துவம் அளிக்காமல் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகப் புலம்புகிறார்கள் அத்துறையில் இருக்கும் வன்னியர் அல்லாத பிற அதிகாரிகள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in