
தஞ்சை மாணவி மரணத்தை மதமாற்ற விவகாரமாக்கி தேசியப் பிரச்சினையாக்கிய பாஜக, மேலூர் சிறுமியின் மரணத்தையும் அரசுக்கு எதிரான விவகாரமாக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அதை தனது சாதுர்யத்தால் முறியடித்தார் அமைச்சர் பி.மூர்த்தி. சிறுமியின் மரணத்தை ‘லவ் ஜிகாத்’ என்று முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பிய பாஜக, கள்ளர் சமூகத்தினரையும் முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால், அமைச்சர் மூர்த்தி ஸ்பாட்டுக்கே போகாமல் சிறுமியின் உறவினர்களிடம் போனிலேயே பேசி அவர்களை சமாதானப்படுத்தினர். அத்துடன் தனது சொந்தப் பணம் 5 லட்ச ரூபாயையும் சிறுமியின் குடும்பத்துக்குக் கொடுத்தார். அத்துடன், சிறுமியைச் சீரழித்த இளைஞரையும், அவரது குடும்பத்தினரையும் மத பேதமெல்லாம் பார்க்காமல் கைது செய்ய வைத்தார் மூர்த்தி. ‘இறந்த சிறுமியின் தாய்க்கு அரசு வேலை’ என பாஜகவினர் அடுத்த பிரச்சினையை ஆரம்பித்ததுமே சத்துணவு சமையலர் பணிக்கான ஆணையை சிறுமியின் தாய்க்கு உடனடியாக வழங்க வைத்து பாஜகவினரை வாயடைக்க வைத்தார் மூர்த்தி.