சேகர் பாபுவுடன்...
சேகர் பாபுவுடன்...

மலைக்கவைத்த மனோ தங்கராஜ்!

கிறிஸ்தவரான அமைச்சர் மனோ தங்கராஜை இந்து கோயில்களுக்குள் நுழையவிடாமல் தடுப்பதை ஒரு இயக்கமாகவே நடத்தியது கன்னியாகுமரி பாஜக. அதற்காக அவரும் அசரவில்லை. திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்காக முதல்நாளே அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவை கன்னியாகுமரிக்கு வரவைத்த மனோ தங்கராஜ், மாவட்டத்திலுள்ள பிரதான கோயில்களுக்கு அவரை அழைத்துச் சென்று ஆய்வு செய்தார். கும்பாபிஷேக நாளில் உள்ளூர் விடுமுறைக்கும் ஏற்பாடு செய்தார். அத்துடன், பிரசித்திபெற்ற சிவாலய ஓட்டத்தில் வரும் 12 சிவன் கோயில்களின் புனரமைப்புக்காக 2.5 கோடி ரூபாய் நிதியையும் பெற்றுக் கொடுத்துள்ளார். இந்து கோயில்கள் தொடர்பான பணிகளில் மனோ தங்கராஜ் இப்படி ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருப்பதால் அடுத்து எதைச் சொல்லி மனோவுக்குத் தடைபோடுவது எனத் தெரியாமல் மலைத்துப் போய் நிற்கிறது தாமரை முகாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in