மாஸ் காட்டிய மா.சுப்பிரமணியன்

மாஸ் காட்டிய மா.சுப்பிரமணியன்

ஆகஸ்ட் 20 முதல்வர் ஸ்டாலினின் 47-வது திருமண நாளை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் திமுக முன்னணியினரும் அமைச்சர்களும் திரளாகக் குவிந்தனர். அத்தனை பேரும் ஸ்டாலின் - துர்கா தம்பதிக்கு வாழ்த்துச் சொல்லி ஆசி பெற்றனர். அவர்களில் பலரும் ஸ்டாலின் - துர்கா ஸ்டாலின் காலில் விழுந்து ஆசியும் பெற்றனர். மூத்த அமைச்சர்களும் விதிவிலக்கின்றி காலில் விழ முயற்சித்தனர். வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஸ்டாலினின் காலைத் தொடுவதற்காக குனிந்தார். ஆனால், அவரை அதற்கு மேல் விடாமல் இழுத்து அணைத்துக் கொண்டார் ஸ்டாலின். மூத்த அமைச்சர்களே முதல்வரின் காலில் சகஜமாக விழ முயற்சித்த நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கம்பீரமாக பூங்கொத்தையும் திருமண நாள் அன்புப் பரிசையும் கொடுத்துவிட்டு கெத்தாக கைகூப்பிச் சென்றது அங்கிருந்த பலரையும் வியக்க வைத்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in