சென்டிமென்ட் பார்க்கும் செஞ்சி மஸ்தான்!

செஞ்சி மஸ்தான்
செஞ்சி மஸ்தான்

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இஸ்லாமியராக இருந்தாலும் அண்மைக்காலமாக ரொம்பவே சென்டிமென்ட் திலகமாக மாறிவிட்டார் என்கிறார்கள். எந்த நேரத்தில் எங்கே செல்ல வேண்டும்... எந்த இடத்துக்கு எந்த உடையணிந்து செல்ல வேண்டும் என்பதில் எல்லாம் அக்மார்க் இந்துக்களை மிஞ்சும் அளவுக்கு அநியாயத்துக்கு சென்டிமென்ட் பார்க்கிறாராம் அமைச்சர். இதையெல்லாம் கணக்குத் தப்பாமல் சொல்லி தனக்கு வழிகாட்டுவதற்காகவே பிரத்யேகமாக ஒரு நபரையும் நியமித்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆரம்பத்தில் அந்த நபர் கணித்துக் கொடுத்த ஒன்றிரண்டு விஷயங்கள் கச்சிதமாக கைகூடியதால் அவர் எது சொன்னாலும் அப்படியே நம்புகிறாராம் அமைச்சர். வீட்டார் போன்போட்டாலும் அவசரப்பட்டு எடுக்காத அமைச்சர் மஸ்தான், தனது சென்டிமென்ட் செகரட்டரியின் போன் என்றால் மட்டும் எந்த நிகழ்ச்சியில் இருந்தாலும் பவ்யமாய் உடனே போனை எடுத்துப் பேசிவிடுகிறாராம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in