அனிதாவைச் சுற்றும் ஆபத்துகள்!
அனிதா ராதாகிருஷ்ணன்

அனிதாவைச் சுற்றும் ஆபத்துகள்!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் பவரை பறித்தே தீருவதென திமுகவுக்குள்ளேயே சிலர் தீயாய் வேலை செய்கிறார்களாம். அப்படித்தான், முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் வைகுண்டத்திடம் அனிதா பேசும் ஆடியோ அண்மையில் வைரல் ஆனது. எப்போதோ நடந்ததை இப்போது ஏன் எடுத்துவிடுகிறார்கள் என அனிதாவே குழம்பிப்போனார். அடுத்ததாக, அனிதாவின் ஆதரவாளர் பில்லா ஜெகனின் ஆட்டம் தொடங்கி, நிலுவையில் இருக்கும் அனிதா தொடர்பான குற்றவழக்குகள் வரை பட்டியலிட்டு வாட்ஸ் - அப்பிலும் அவரை தெறிக்கவிட்டனர். தற்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருக்கிறார் அனிதா. மாநில இளைஞரணி துணைச் செயலாளராக இருக்கும் ஜோயலுக்கு மாவட்டச் செயலாளர் பதவி மீது நீண்ட நாட்களாகவே ஒரு கண் உண்டு. உதயநிதியுடன் இருக்கும் நெருக்கத்தை வைத்து இந்த சமயத்தில் மாவட்டச் செயலாளராகிவிட துடிக்கிறாராம் ஜோயல். அதற்கு தோதாகவே அனிதாவுக்கு எதிரான வில்லங்க விவகாரங்களைத் தூசு தட்டி தெறிக்கவிடுகிறார்களாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in