திருச்சி மாநகர் திமுகவை இரண்டாக்கிய மகேஷ்!

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

அமைச்சர் நேருவின் கோட்டையாக இருந்த திருச்சியில் தனது செல்வாக்கை நிலைநிறுத்த பலவிதமான உத்திகளைக் கையாண்டு அதில் வெற்றியும் பெற்று வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. ஆனாலும் அவரை தன் ஆளுகைக்கு உட்பட்ட மாநகர திமுகவுக்குள் தடம் பதிக்க விடாமல் தடுத்து வந்தார் தற்போதைய மேயரும் மாநகர திமுக செயலாளருமான அன்பழகன். நேருவின் தீவிர விசுவாசியான அன்பழகன் மாநகருக்குள் அமைச்சர் நேருவுக்கான ஆதரவுக் கொடியை உயர்த்திப் பிடிப்பவர். அதனாலயே உள்ளாட்சித் தேர்தலில் அன்பில் மகேஷின் திட்டங்களை தவிடுபொடியாக்கி அன்பழகனையே மேயராக்கினார் நேரு. அந்த சமயத்தில், தனது ஆதரவாளர் மதிவாணனை மேயராக்க முயன்று அது முடியாமல் போன வருத்தத்தில் இருந்த அன்பில் மகேஷ், இப்போது அதற்கு ஈடுகட்டும் வகையில் தனது ராஜதந்திரத்தால் அன்பழகன் தனித்து ஆண்ட திருச்சி மாநகர திமுக செயலாளர் பதவியையே இரண்டாக உடைத்துவிட்டார். இதன்படி, திருச்சி மாநகர் மாவட்டமானது மாநகர் தெற்கு, மாநகர் மத்தி என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், மத்திய மாவட்டத்துக்கு அன்பழகனும், தெற்கு மாவட்டத்துக்கு மதிவாணனும் மாவட்டச் செயலாளர்களாக வரக்கூடும் என்கிறார்கள். ஆக, அங்கே சுற்றி இங்கே சுற்றி கே.என்.நேருவின் கோட்டைக்குள்ளேயே கொடிநாட்டிவிட்டார் அன்பில் மகேஷ்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in