மில்லரை வைத்து கில்லருக்கு வலை?

மில்லர்
மில்லர்

அதிமுக முன்னாள் அமைச்சர் மில்லருக்கும், ‘கோடநாடு புகழ்’ சஜீவனுக்கும் கட்சிக்குள் ஏழாம் பொருத்தம். இருவரும் ஆளுக்கொரு கோஷ்டியாகச் செயல்பட்டாலும் சஜீவன் கோஷ்டியின் கை ஓங்கியதால், மில்லர் ஆட்கள் மிளிராமல் கிடந்தனர். தற்போது தூசிதட்டப்படும் கோடநாடு வழக்கின் மறு விசாரணையில், சஜீவனின் ஆட்கள் வரிசையாகச் சிக்குவதால் மில்லர் தரப்பு ஏக குஷியில் இருக்கிறது. கோடநாடு கொலை வழக்கில், பல முக்கிய விவகாரங்களை போலீஸுக்குப் போட்டுக் கொடுத்து புண்ணியம் தேடுவதே மில்லர் கோஷ்டியினர்தானாம்.

சஜீவன்
சஜீவன்

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக மில்லருக்கும் சம்மன் அனுப்பி இருக்கிறது போலீஸ். 15 வருடங்களுக்கு முன்பு சஜீவனும் மில்லரும் நகமும் சதையுமாய் இருந்தவர்கள் என்பதால், சஜீவனின் ஆதிகால அந்தரங்கங்களை மில்லர் மூலமாக அம்பலத்துக்குக் கொண்டுவரலாம் என நம்புகிறதாம் போலீஸ்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in