சீல் வைத்து சீண்டும் மகேஷ்!

கிருஷ்ணகுமார்
கிருஷ்ணகுமார்

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உள்ள பாலாஜி கேண்டீனை அண்மையில் ஆய்வுசெய்த மாநகராட்சி திமுக மேயர் மகேஷ், தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தியதாகச் சொல்லி, கேண்டினை பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டார். இத்தனைக்கும் இது திமுக பிரமுகரான கிருஷ்ணகுமாருக்குச் சொந்தமானது. இந்த நடவடிக்கையால், ஆளும்கட்சி புள்ளிக்குச் சொந்தமான கேண்டினையே தயவு தாட்சண்யம் பார்க்காமல் இழுத்துமூடிவிட்டார் மேயர் என ஊருக்குள் நற்பெயர் சம்பாதித்திருக்கிறார் மேயர் மகேஷ். ஆனால், உள்ளுக்குள் விசாரித்தால் உபகதை ஒன்று சொல்கிறார்கள். கேண்டீன் நடத்தும் கிருஷ்ணகுமார் அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்திடம் உதவியாளராக இருந்தவர். அங்கிருந்து திமுகவுக்கு ஜம்ப் ஆனவர், சுரேஷ் ராஜனுக்கு ரொம்பவே விசுவாசம் காட்டினாராம். ஏற்கெனவே மேயர் மகேஷுக்கும் சுரேஷ் ராஜனுக்கும் உட்கட்சிப் பகை உரசிக் கொண்டிருப்பதால், சுரேஷ் ராஜனை சீண்டி விளையாட கிருஷ்ணகுமார் கேண்டீனுக்கு சீல் வைத்துவிட்டாராம் மகேஷ். அவரைப் பொறுத்தவரை ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in