அவசரமாய் ஆட்டையைக் கலைத்த மகேஷ்!

அவசரமாய் ஆட்டையைக் கலைத்த மகேஷ்!
நலத்திட்ட விழா

நாகர்கோவில் இளங்கடை முஸ்லிம் ஜமாத் சார்பில் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் தலைமையில் நலத்திட்ட விழா ஒன்று அண்மையில் நடந்தது. இதில், எழுத்தாளர்கள் மீரான்மைதீன், ஹமீம் முஸ்தபா ஆகியோரையும் பேச அழைத்திருந்தனர். ஆனால் எழுத்தாளர்கள் வாழ்த்திப் பேசவேண்டிய நேரத்தில், தங்களுக்கு வேறு வேலை இருப்பதாகச் சொல்லி மைக்கைக் கேட்டாராம் மாநகர மேயர் மகேஷ். வேறு வழியில்லாமல், எழுத்தாளர்களை ஒதுக்கிவிட்டு, மகேஷையும் அமைச்சர்கள் மனோதங்கராஜ், மஸ்தான் ஆகியோரையும் பேசவைத்து நிகழ்ச்சிக்கு சுபம் போட்டுவிட்டார்களாம் ஏற்பாட்டாளர்கள். விஷயம் என்னவென்று விசாரித்தால், எழுத்தாளர்களுடன் சேர்த்து முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனின் பெயரும் இருந்தது. எழுத்தாளர்களைப் பேச அனுமதித்தால் சுரேஷ்ராஜனையும் அனுமதிக்க வேண்டும் என்பதால் அவசரம் காட்டி ஆட்டையைக் கலைத்துவிட்டார் மேயர் மகேஷ் என்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in