எங்கும் எதிலும் மனோ தங்கராஜ்!
மனோ தங்கராஜ்

எங்கும் எதிலும் மனோ தங்கராஜ்!

திமுகவின் குமரி கிழக்கு மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கும், மேற்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான மனோதங்கராஜுக்கும் அதிகாரப் போட்டி அதிகரித்துக் கொண்டே வருகிறது. தான் இருக்க வேண்டிய அமைச்சர் பதவி தனது தோல்வியால் மனோவுக்கு போனதை, சுரேஷ்ராஜனால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. இந்த நிலையில், மனோ தங்கராஜும் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டார். தனது மேற்கு மாவட்ட எல்லைக்குள் வரும் கருங்கல் பகுதியில் தனது அலுவலகத்தை வைத்திருக்கிறார் மனோ. இப்போது சுரேஷ்ராஜனின் கோட்டையான நாகர்கோவிலிலும் கூடுதலாக அலுவலகம் ஒன்றைத் திறந்திருக்கிறார்.

சுரேஷ்ராஜன்
சுரேஷ்ராஜன்

அண்மையில் நடந்த இதன் திறப்பு விழாவுக்கு, கூட்டணி தோழர்கள்கூட வந்திருந்து அமைச்சரோடு கைகுலுக்கிவிட்டுப் போனார்கள். ஆனால், உள்ளூர்வாசியான சுரேஷ்ராஜன் அந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லையாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in