மனோ எங்கே... பொன்னார் எங்கே!

மனோ எங்கே... பொன்னார் எங்கே!
பாதிரியார்களுடன் பொன். ராதாகிருஷ்ணன்

வைகாசி விசாகத்தன்று, குமரி மாவட்டம் வேளிமலை குமார சுவாமி கோயில் தேரோட்ட நிகழ்வுக்கு அமைச்சர்கள் மனோதங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன் இருவரும் வந்திருந்தனர். வந்த இடத்தில் வம்பு வளர்த்த பாஜகவினர், “மாற்று மதத்தைச் சேர்ந்த மனோதங்கராஜ் தேர் வடத்தைக் தொடக்கூடாது” என மல்லுக்கு நின்றனர். அப்போது அனிதா, எங்கிருந்தோ கொண்டு வந்த காவித் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு மனோவையும் உடன் அழைத்துக் கொண்டு வடம்பிடித்து தேரை இழுத்து நிலைமையைச் சமாளித்தார். இப்போது, பாஜகவினரின் இந்தச் செயலுக்குப் பதிலடி கொடுக்கக் கிளம்பியிருக்கும் திமுகவினர், தேர்தல் சமயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தேவாலயங்களுக்குச் சென்று பாதிரியார்கள் முன்பாக பவ்யம் காட்டி நின்றபோது எடுத்த படங்களை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். ’எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அமைச்சர் என்ற முறையில் மதநல்லிணக்கத்துடன் தேர்வடம் பிடித்த மனோ எங்கே... ஓட்டுக்காக மட்டும் சிறுபான்மையினரைத் தேடி வரும் பாஜகவினர் எங்கே?’ என்று அவர்கள் கேட்கும் கேள்விக்கு பாஜகவினரிடம் பதில் இல்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in