மனதை மாற்றும் மனோஜ் பாண்டியன்!

மனோஜ் பண்டியன்
மனோஜ் பண்டியன்

நீதிமன்றத்தில் ஓபிஎஸ் அணிக்கு சாதகமாக வாதங்களை எடுத்துவைத்து உரிய தீர்ப்பைப் பெறுவதற்கு ரொம்பவே மெனக்கிட்டவர் வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன். இதனால் அவரை ரொம்பவே மதித்துப் போற்றுக்கிறாராம் ஓபிஎஸ். இந்த நிலையில், சட்ட நடவடிக்கைகளோடு நிறுத்திக் கொள்ளாமல், தென் மாவட்டங்களில் ஈபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்ட அதிமுக பொறுப்பாளர்களிடம் நயமாகப் பேசி அவர்களை ஓபிஎஸ் பக்கம் ஈர்க்கும் முயற்சியிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் மனோஜ். அப்படித்தான் நெல்லை மாவட்டம் வள்ளியூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களின் செயலாளர்களான அழகானந்தத்தையும் செல்வராஜையும் தங்கள் பக்கம் இழுத்திருக்கிறார் மனோஜ். இந்த இரண்டு ஒன்றியங்களுமே ஈபிஎஸ் சைடில் சட்ட நடவடிக்கைகளை கவனித்துவரும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான இன்பதுரையின் ராதாபுரம் தொகுதிக்குள் வருபவை என்பது கூடுதல் தகவல். அடுத்ததாக இன்னும் சில ஒன்றிய செயலாளர்களுக்கும் யதார்த்தத்தை எடுத்துச் சொல்லி தூது அனுப்பி இருக்கிறாராம் மனோஜ் பாண்டியன்.

அழகானந்தம், செல்வராஜுடன் மனோஜ் பாண்டியன்...
அழகானந்தம், செல்வராஜுடன் மனோஜ் பாண்டியன்...

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in