மாணிக்கம் தேவராகவே மாறிப்போன தாகூர்!

மாணிக்கம் தேவராகவே மாறிப்போன தாகூர்!
மாணிக்கம் தாகூர்RahulSRavi

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக முதன் முதலில் களமிறங்கிய மாணிக்கம் தாகூரின் பெயரை, சுவர் விளம்பரங்களில் 'மாணிக்கம் தேவர்' என்று எழுதச் சொன்னார் கருணாநிதி. ஏதோ வடநாட்டுக்காரர் என்று நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த யோசனையைச் சொன்னார் கருணாநிதி. ஆனால், தாகூர் அதை எப்படிப் புரிந்துகொண்டாரோ தெரியவில்லை, அவரது அரசியலில் சாதியும் முக்கியப் பங்காற்றுகிறது. அதுவும் 2-வது முறை எம்பி-யான பிறகு, அவர் சாதி அரசியலைத் தீவிரமாகச் செய்கிறார் என்று புகார் வாசிக்கிறார்கள் விருதுநகர் மாவட்ட காங்கிரஸார். கட்சி நிர்வாகிகள் நியமனம் தொடங்கி எல்லாவற்றிலும் சாதி பார்த்து, முக்குலத்தோருக்கே வாய்ப்பு கொடுக்கிறார் எம்பி என கே.எஸ்.அழகிரி தொடங்கி ராகுல் வரைக்கும் புகார் மனுக்களை அனுப்பி இருக்கிறார்களாம் விருதுநகர் காங்கிரஸார்.

Related Stories

No stories found.