சாதிய கூட்டு; சங்கடத்தில் மணிகண்ணன்!

சாதிய கூட்டு; சங்கடத்தில் மணிகண்ணன்!
மணிகண்ணன்

“பேருக்குத்தான் நான் இங்கே எம்எல்ஏவா இருக்கேன். ஆனா, எல்லாத்தையும் அவருதானே சாதிச்சுக்கிறாரு” என்று புலம்புகிறாராம் உளுந்தூர்பேட்டை திமுக எம்எல்ஏ மணிகண்ணன். இவரது தொகுதிக்குள் நடக்கும் டெண்டர்கள், கல்குவாரி ஒப்பந்தங்கள் என எதுவாக இருந்தாலும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுரு கைகாட்டும் நபர்களுக்கே ஜெயமாகிறதாம். அதிமுககாரர் எப்படி திமுக ஆட்சியில் இத்தனை அதிகாரம் செலுத்துகிறார் என விசாரித்தால், ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏவும் கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக செயலாளர்களில் ஒருவருமான வசந்தம் கார்த்திகேயனும் குமரகுருவும் அத்தனை நெருக்கம் என்கிறார்கள். இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், உறவுமுறையாக உள்ளுக்குள் டீல் போட்டுக் கொண்டு அனைத்து விவகாரங்களிலும் அள்ளித் தட்டுகிறார்களாம். இதனால், ஆளும்கட்சியாக இருந்தும் வருமானத்துக்கு வழிதெரியாமல் ஆலாய் பறக்கிறாராம் மணிகண்ணன்.

Related Stories

No stories found.