மறுபடியும் முதல்லருந்தா மாஃபா?

மறுபடியும் முதல்லருந்தா மாஃபா?
பாண்டியராஜன்

தொழிலதிபராக இருந்த மாஃபா பாண்டியராஜன், அரசியல்வாதியாக அரிதாரம் பூசியது விருதுநகரில்தான். தேமுதிகவில் சேரும் முன்பே விருதுநகரில் தனது அலுவலகத்தைத் திறந்து செயல்பட ஆரம்பித்தவர், பிறகு அக்கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு எம்எல்ஏவும் ஆனார். பிறகு அதிமுகவில் சேர்ந்து அமைச்சரானார். அதன் பிறகு முழுநேர சென்னைவாசியாக மாறிப்போன அவர் ஆவடி தொகுதியையேச் சுற்றி வந்தார். இந்த நிலையில், இப்போது மீண்டும் தனது மாஃபா நிறுவனத்துக்கு விருதுநகரில் ஓர் அலுவலகம் திறந்திருக்கிறார். அடுத்த பாராளுமன்றத் தேர்தலை குறிவைத்து அண்ணாச்சி களமிறங்கிவிட்டார் என்கிறார்கள் விருதுநகர்க்காரர்கள். ஒருவேளை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே (பாஜக) போகப்போகிறாரா?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in