என்ஐஏ ஏன் வந்தது மதுரைக்கு?

என்ஐஏ ஏன் வந்தது மதுரைக்கு?

அரசியல் பரபரப்புக்கு மத்தியில் மதுரைக்குள் என்ஐஏ அதிகாரிகள் வந்து ரகசிய விசாரணை நடத்திவிட்டுப் போயிருப்பதாகச் சொல்கிறார்கள். விஷயம் கொஞ்சம் வில்லங்கமானது. மதுரையில் 53 போலி பாஸ்போர்ட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அது தொடர்பான விசாரணைக்காகவே மதுரைக்கு வந்துவிட்டுப் போயிருக்கிறது என்ஐஏ படை. இவர்கள் விசாரணையில் இருந்தபோது மாநில அரசின் உளவுத்துறை உயரதிகாரிகளும் மதுரையில் முகாமிட்டு விசாரணை நடத்தியதாகச் சொல்கிறார்கள். போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் காவல் துறையைச் சார்ந்த சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கும் என்ஐஏ, சந்தேக வளையத்தில் இருக்கும் அதிகாரிகளின் சொத்துகள் பற்றிய விவரங்களையும் சேகரித்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகு மதுரையை மையப்படுத்தி இந்த வில்லங்க விவகாரம் பூதாகரமாக வெடிக்கலாம் என்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in