பாஜகவுக்கு தூதுவிட்ட மதுரை திமுக!

பாஜகவுக்கு தூதுவிட்ட மதுரை திமுக!

மதுரை திமுகவில் எத்தனையோ பேர் மேயர் பதவிக்காக காத்துக் கொண்டிருந்த நிலையில், தனது விசுவாசியான இந்திராணியை மேயராக்கினார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். இந்திராணியும் மேயர் செங்கோலை தாங்கிய புதிதில், “அமைச்சர் சொல்லாமல் எதையும் செய்யமாட்டேன்” என்று பகிரங்கமாகவே பேசினார். ஆனால், இப்போது அதில் தான் சிக்கல் என்கிறார்கள். அமைச்சர் ஊரில் இருக்கும் நாட்களில் அவரை கட்டாயம் நேரில் போய்ப் பார்க்க வேண்டும் என்கிறார்களாம் அடிவருடிகள். அத்துடன், மாநகராட்சியில் எந்த ஃபைலைத் தொடுவதாக இருந்தாலும் அமைச்சர் அனுமதி பெற்றுத்தான் தொடவேண்டும் என்கிறார்களாம். மீறி கைவைத்தால் அமைச்சரால் மேயருக்கு உதவியாளராக அமர்த்தப்பட்டுள்ள அர்ச்சனா அணைபோடுகிறாராம். இதனால் தன்னால் சுயமாகச் செயல்பட முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருக்கிறாராம் மேயர் இந்திராணி. இந்த நிலையில், “மதுரை மாநகராட்சியில் எந்த வேலையும் உருப்படியா நடக்கலைன்னு நீங்க ஒரு அறிக்கை விடுங்கண்ணே” என்று பாஜகவின் மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணனிடம் திமுகவினர் சிலரே தூதுபோய்ச் சொன்னார்களாம். அப்படியாவது மேயரை சுயமாக செயல்பட விடுகிறார்களா என்று பார்க்கத்தான் இந்த தூதுப்படலமாம்!

Related Stories

No stories found.