கனவுனாலும் ஒரு நியாயம் வேணாமாய்யா?

கனவுனாலும் ஒரு நியாயம் வேணாமாய்யா?
சரவணன்

6 வருடத்தில் 5 கட்சிகள் மாறிய ‘தில்’லான டாக்டர் மதுரை சரவணன். பசையான பார்ட்டி என்பதால் பாசமாக ஒட்டிக்கொண்ட பாஜக, திமுகவிலிருந்து வந்த வேகத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் இவருக்கு சீட்டும் கொடுத்தது. ஆனால் கரை சேரமுடியாதவர், “பேசாமல் திமுகவிலேயே இருந்திருக்கலாம்” என புலம்பிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இவரை மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவராக அறிவித்திருக்கிறார்கள். இதனால் பழையபடி குஷியாகிவிட்ட சரவண விசுவாசிகள், ”அண்ணன் தான் மதுரை மேயர் வேட்பாளர்” என அடுத்த அம்பை எடுத்து வீசுகிறார்கள். கூட்டணி தோழர்களான அதிமுகவினரோ, “இருக்கிற 100 வார்டுல இவங்களுக்கு 4 வார்டு ஒதுக்கினாலே பெருசு. இதுல எப்படி இவங்க மேயர் ஆவுறதாம்” என்று சிரிக்கிறார்கள். பாஜகவினரோ, “அதிமுக சரிப்பட்டு வராட்டி தனியாவே நின்னு மதுரை மேயர் சீட்டை புடிப்போம்” என்று மனசாட்சியே இல்லாமல் சரவணனை கொம்பு சீவுகிறார்களாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in