மதிவேந்தன் மனசுக்குள்ள ஆயிரம் இருக்கு!

மதிவேந்தன் மனசுக்குள்ள ஆயிரம் இருக்கு!
மதிவேந்தன்

சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தனை அவரது சொந்த மாவட்டமான நாமக்கல்லில் நடைபெறும் அரசு விழாக்களில் கூட அதிகம் பார்க்கமுடிவதில்லை. கேட்டால், “துறை சார்ந்த பணிகளில் அண்ணன் பிசியாக இருக்கிறார்” என்கிறார்கள் ஆதரவாளர்கள். ஆனால், உண்மை அதுவல்ல என்று சொல்லும் இன்னொரு தரப்பினரோ, “பெரும்பாலும் அமைச்சர் நாமக்கல் வீட்டில்தான் இருக்கிறார். தினமும் காலையில் அன்றைய பணிகள் குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான கே.ஆர்.என். ராஜேஸ்குமாருக்கு தகவல் சொல்வார். அவர் ஓகே சொல்லும் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அமைச்சர் போவார். மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் சொல்வதை மீறி அமைச்சரால், தான் விரும்பிய நிகழ்ச்சிகளுக்குக்கூட போகமுடியவில்லை என்பது தான் நிஜம். இதை நாங்கள் சொல்லல... அமைச்சரைப் பார்க்க வரும் கட்சிக்காரங்கட்ட அவங்க அப்பா மாயவனே சொல்லிப் புலம்புறாரு” என்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in