எடுபடாமல்போன எடப்பாடியின் சிபாரிசு!

எடுபடாமல்போன எடப்பாடியின் சிபாரிசு!
எடப்பாடியுடன் ராமலிங்கம்

அதிமுகவில் உட்கட்சி தேர்தல் தொடங்கி இருக்கும் நிலையில், “எடப்பாடி சொன்னாலும், ஓபிஎஸ் சொன்னாலும் எனக்கு ஓகேன்னா தான் ஓகே” என்கிறாராம் முன்னாள் அமைச்சரும் ஈரோடு மேற்கு எம்எல்ஏ-வுமான கே.வி.ராமலிங்கம். உள்ளாட்சித் தேர்தலில் ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் தனக்குச் சரியாக இருந்தவர்களை மட்டுமே வேட்பாளராக நிறுத்தினாராம் ராமலிங்கம். இரண்டு வார்டுகளுக்கு மட்டும் எடப்பாடி தரப்பிலிருந்து சிபாரிசு வந்ததாம். அதை சட்டைசெய்யவில்லையாம் ராமலிங்கம். இது தொடர்பாக எடப்பாடியே போனில் பேசிய பிறகும்கூட ஏதேதோ காரணங்களைச் சொல்லி நிராகரித்துவிட்டாராம் தில்லான ராமலிங்கம். உட்கட்சித் தேர்தலில் இவர் என்னவெல்லாம் உதார்காட்டப் போகிறாரோ என ஈரோடு அதிமுகவினர் கொஞ்சம் மிரண்டு தான் கிடக்கிறார்கள்.

Related Stories

No stories found.