ஆசானுக்கு மரியாதை

ஆசானுக்கு மரியாதை
ஜூட் தேவ் திமுகவில் இணைந்த போது...

குமரி மாவட்டத்தில் மிச்சம் மீதி இருந்த தமாகாவும் மொத்தமாக காலியாகி வருகிறது. தமாகாவின் முக்கியப் புள்ளிகளான கே.டி.உதயம், பினுலால் சிங் ஆகியோர் ஏற்கெனவே காங்கிரஸில் இணைந்துவிட்ட நிலையில், தற்போது குமரி மேற்கு மாவட்ட தமாகா தலைவரும், முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸின் மகனுமான ஜூட் தேவ் திமுகவில் இணைந்துள்ளார். 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் ஜூட் தேவுக்காகவே, அதிமுக கூட்டணியில் கிள்ளியூர் தொகுதியைக் கேட்டு வாங்கினார் ஜி.கே.வாசன். குமாரதாஸ் குடும்பத்துக்கென கிள்ளியூர் தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. அமைச்சர் மனோ தங்கராஜ் அரசியல் பழகியதே குமாரதாஸிடம்தான் என்று சொல்வார்கள். அந்த நன்றிக்கடனுக்காகவோ என்னவோ, தனது அரசியல் ஆசானின் மகனை அறிவாலயத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டார் மனோ.

Related Stories

No stories found.