பழிக்காக கொடுத்தார்கள்... எதற்காக எடுத்தார்கள்?

பழிக்காக கொடுத்தார்கள்... எதற்காக எடுத்தார்கள்?
தாரகை கட்பர்ட்

சட்டப்பேரவைத் தேர்தலில் மீனவர் சமூகத்தைப் புறக்கணித்துவிட்டது காங்கிரஸ் என்ற பழியைத் துடைப்பதற்காக, அந்த சமூகத்தைச் சேர்ந்த தாரகை கட்பர்ட்டை குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக்கினார்கள். அதற்கு முன்பு இந்தப் பதவி ராஜேஷ்குமார் எம்எல்ஏ வசம் இருந்தது. காங்கிரஸ் கட்சியின் ஒரே பெண் மாவட்ட தலைவர் என்ற அந்தஸ்துடன் கம்பீரமாகவே வலம் வந்து கொண்டிருந்தார் கட்பர்ட். ஆனால், பதவிக்கு வந்து 6 மாதம்கூட ஆகாத நிலையில் காரணம் சொல்லாமலே கட்பர்ட்டுக்கு கல்தா கொடுத்துவிட்டது காங்கிரஸ். தமாகாவிலிருந்து அண்மையில் தாவிய பினுலால் சிங்கை, மேற்கு மாவட்ட தலைவராக அறிவித்திருக்கிறார்கள். மாவட்ட தலைவராக இருப்பதால், தேர்தலில் தனக்குப் போட்டியாக சீட்டும் கேட்பார் என்ற முன்னெச்சரிக்கையுடன் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து கட்பர்ட்டின் மாவட்டத் தலைவர் பதவியைப் பறித்துவிட்டதாக ராஜேஷ்குமாரை கரித்துக் கொட்டுகிறது கட்பர்ட் தரப்பு. ஆனாலும், “மாவட்டத் தலைவர் பதவி போனால் என்ன மாநில பொதுச் செயலாளர் பதவி இருக்குல்ல” என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு இருக்கிறாராம் கட்பர்ட்.

Related Stories

No stories found.