கே.என்.நேரு சொல்லியும் கேட்கல!

கே.என்.நேரு சொல்லியும் கேட்கல!

தனக்கு வேண்டப்பட்டவர்கள் பலன் அடைவதற்காக இளையான்குடி பேருந்து நிலையத்தை ஊருக்கு வெளியே கொண்டுசெல்வதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு எதிராக இளையான்குடிவாசிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தொகுதியின் திமுக எம்எல்ஏ-வான முன்னாள் அமைச்சர் தமிழரசியிடமும் இதுவிஷயமாக வருத்தப்பட்டார்களாம். இதையடுத்து, இளையான்குடி மக்களை அமைச்சர் கே.என்.நேருவிடம் அனுப்பி வைத்தாராம். அனைத்தையும் முழுமையாகக் கேட்டுக்கொண்ட நேரு, அப்போதே பெரியகருப்பனுக்கு போன் போட்டு, “இவ்வளவு எதிர்ப்பு இருக்கும்போது எதுக்காக அந்த இடத்துக்கு பஸ் ஸ்டாண்டை மாத்துறீங்க? அதை ஸ்டாப் பண்ணுங்க. நானே நேரில் வந்து வேற இடம் பார்த்து ஃபிக்ஸ் பண்றேன்” என்று சொன்னாராம். நேரு சொன்னதால் தட்டமுடியாத பெரியகருப்பன், “ஏதோ பத்து பேர் சொல்றாங்கன்றதுக்காக நிப்பாட்டச் சொல்றாரே” என்று புலம்பினாராம். இதனிடையே, பேருந்து நிலையத்துக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இப்போது அவசர கதியில் பணிகளைத் தொடங்கி இருக்கிறார் காண்ட்ராக்டர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in