முன்பணமாக மூன்று கோடி!

முன்பணமாக மூன்று கோடி!
கே.ஆர்.பெரியகருப்பன்

காரைக்குடி நகர்மன்ற தேர்தலில் போட்டியிட்ட, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் 36 பேருக்கும் தலா 5 லட்ச ரூபாய் வீதம் தேர்தல் செலவுக்கு பட்டுவாடா செய்யப்பட்டது. போட்டி பலமாக இருந்த வார்டுகளுக்கு கூடுதலாகவும் எடுத்துவிட்டார்கள். நகர்மன்ற தலைவர் பதவிக்கான ரேஸில் இருக்கும் மூன்று நபர்களிடம் இருந்து சுமார் 3 கோடி ரூபாய் வரைக்கும் முன்பணமாகப் பெற்றே, இந்தத் தொகையைப் பட்டுவாடா செய்தார்களாம். இந்த மூவரில் யாரை தலைமை வேட்பாளராக அறிவிக்கிறதோ அதை ஏற்றுக் கொண்டு மற்ற இருவரும் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும், அவர்கள் கொடுத்திருந்த முன்பணத்தை சேர்மன் வேட்பாளரானவர் அவர்களுக்கு பட்டுவாடா செய்துவிட வேண்டும் என்பது ஒப்பந்தமாம்.

குணசேகரன்
குணசேகரன்

பணம் கொடுத்த மூவருமே இப்போது கவுன்சிலர் ஆகிவிட்டார்கள். மூவரையுமே சேர்மன் ஆசை விடவில்லை. நகரச் செயலாளர் குணசேகரனே சேர்மன் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று சொல்லப்படும் நிலையில், முன்னாள் சேர்மன் முத்துத்துரையின் ஆட்களும் தங்கள் பங்குக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இன்னொருவர் சபரீசன் ரூட்டில் முயற்சிப்பதாகச் சொல்கிறார்கள். இதனிடையே, திமுக கவுன்சிலர்களை அழைத்துப் பேசிய சிவகங்கை மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன், “கட்சி யாரை அறிவிக்கிறதோ அவரை ஜெயிக்க வைக்கணும். அப்படி இல்லாம யாராச்சும் குறுக்கு வழியில கவுன்சிலர்களை கடத்தி காரியம் சாதிக்க நினைச்சீங்கன்னா போலீஸை வெச்சு அடிச்சுத் தூக்கிட்டு வரவும் தயங்கமாட்டோம்” என்று ‘அன்பாக’ச் சொல்லி அனுப்பி இருக்கிறாராம்.

Related Stories

No stories found.