கோடநாடு விசாரணைக்கு தயாராய் இருக்கும் சசிகலா!

சசிகலா
சசிகலா

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனை கோவைக்கு வரவைத்து மூன்று மணி நேரம் விசாரணை நடத்தி இருக்கிறது போலீஸ். கோடநாடு எஸ்டேட்டில் சசிகலாவும் பங்குதாரர் என்பதால், விரைவில் அவரும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்கிறார்கள்.

விவேக் ஜெயராமன் விசாரணைக்கு வந்தபோது...
விவேக் ஜெயராமன் விசாரணைக்கு வந்தபோது...

இதனிடையே, கோடநாடு பங்களா கொள்ளை தொடர்பாக தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசி இருக்கும் சசிகலா, “எஸ்டேட் பங்களாவின் ஜன்னல்களை உடைத்து கொள்ளை நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கான வாய்ப்புக் குறைவு. கோடநாடு பங்களா கடல் மட்டத்திலிருந்து 6,200 அடி உயரத்தில் உள்ளது. அதனால் இடி மின்னல் தாக்கும் அபாயம் இருப்பதாக பங்களாவை வடிவமைத்த இன்ஜினியர் சொன்னார். அதனால் எந்தக் கதவுக்கும் இரும்பைப் பயன்படுத்தி இருக்கமாட்டார். எனவே, கதவை உடைத்து கொள்ளையடிக்க வாய்ப்பே இல்லை. போலீஸார் என்னை விசாரணைக்கு அழைத்தால் எனக்குத் தெரிந்த தகவல்களை சொல்லத் தயாராய் இருக்கிறேன். உண்மையிலேயே இந்தச் செயலைச் செய்தவர்கள் யார் என்று தெரிந்துகொள்ள எனக்கும் துடிப்பாத்தான் இருக்கு” என்று சொன்னாராம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in