தம்பிதான் தடைக்குக் காரணமா?

தம்பிதான் தடைக்குக் காரணமா?
கே.என்.நேரு

திருச்சி, உறையூர், பாளையம் பஜார் ரோட்டில் இருக்கிறது விக்னேஷ் அவென்யூ அப்பார்ட்மென்ட். இது முழுமையாக தைலம்மை கோயில் குளத்தை ஆக்கிரமித்துக் கட்டப் பட்டுள்ளதாக சமீபத்தில் ஆவணங்களைச் சரிபார்த்து வருவாய்த்துறையினர் உறுதிசெய்தனர். இதையடுத்து, அப்பார்ட்மென்ட்டை இடிக்கப் போவதாக வருவாய் துறையின் சார்பில் நோட்டீஸ் எல்லாம் சர்வானது. ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை... ஆக்‌ஷன் வேலைகள் அத்தோடு பிரேக். இதனிடையே, “அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி கே.என்.மணிவண்ணனும் அந்த அப்பார்ட்மென்ட்டில் தான் வசிக்கிறார். அதிகாரிகளின் ஆழ்ந்த யோசனைக்கு அதுகூட காரணமாக இருக்கலாம்” என்றும் திருச்சிவாசிகள் தீப்பற்ற வைக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in