பரவால்ல... செயினக் கழட்டிக் குடு!

பரவால்ல... செயினக் கழட்டிக் குடு!
அமைச்சர் நேரு

ஆவின் உபபொருட்கள் விற்பனை தொடக்கவிழா திருச்சியில் நடந்தது. இந்த விழாவில் பால்வளத் துறை அமைச்சர் நாசருடன், கே.என்.நேருவும் கலந்துகொண்டார். விழாவுக்கு வந்திருந்த திமுகவினரிடம், ”வெறுங்கைய வீசிட்டுப் போகாம எல்லாரும் ஏதாச்சும் ஒரு பொருள வாங்கிட்டுப் போங்கப்பா” என்றார். அவர் சொன்னதைத் தட்டமுடியாமல் அனைவரும் வரிசையில் நின்று பொருட்களை வாங்கினார்கள். அவர்களிடம் ஜாக்கிரதையாக பணத்தைப் பெற்றுக்கொண்டு பொருட்களை வழங்கினார் நேரு. ஒரு தொண்டர் நெய்யை வாங்கவும், “பணம் எங்கய்யா?” என்று கையை நீட்டினார் நேரு. “கையில பணம் இல்லையண்ணே” என்று தலையை சொரிந்தார் தொண்டர். ”பரவால்ல... கழுத்துல போட்டுருக்க செயினக் கழட்டிக் குடு” என்று நேரு கறார் காட்ட, வாங்கிய நெய்யைத் திருப்பிக் கொடுத்துவிட்டு செயினை இறுகப்பிடித்தபடி, திரும்பிப் பார்க்காமல் நடந்தார் தொண்டர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in