
கேரளத்தில் ஜனபக்ஷம் என்ற அமைப்பை நடத்தி வருபவர் முன்னாள் எம்எல்ஏ-வான பி.சி.ஜார்ஜ். சர்ச்சை மனிதரான இவர், “முஸ்லிம் கடைகளில் டீ குடிக்காதீர்கள். மாற்றுமதத்தினருக்கு டீயில் ஆண்மையைப் பாதிக்கும் பொருள்களைக் கலந்து கொடுக்கிறார்கள்” என போகிற போக்கில் கொளுத்திப் போட்டார். இதற்காக கைதுசெய்யப்பட்ட இவர், ஜாமீனில் வெளியில் வந்தும் சும்மா இருக்கவில்லை. “என்னை கைது செய்து பயங்கரவாதிகளுக்கு பினராயி விஜயன் பரிசு கொடுத்துள்ளார்” என்று முழங்கினார். தனியாக அமைப்பு வைத்திருந்தாலும் ஜார்ஜை பாஜக தான் பின்னால் இருந்து இயக்குகிறதாம். 33 ஆண்டுகள் எம்எல்ஏ-வாக இருந்த ஜார்ஜ், கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் வேட்பாளரிடம் தோற்றுப் போனார். அந்த ஆத்திரத்தில் காம்ரேடுகளுக்கு எதிராக கண்டபடி கருத்துகளை அள்ளி வீசியவரை கணக்காய் வளைத்த கேரள பாஜக, மத ரீதியாக தங்களால் பேசமுடியாத சர்ச்சையான விஷயங்களைப் பேசும் மைக் செட் கணக்காக இவரை பயன்படுத்திக் கொண்டிருக்கிறதாம்.