‘கே’ ரயிலும்... கேரள கட்சிகளும்!

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கேரளத்தில் ‘கே ரயில்’ என்னும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளது பினராயி அரசு. இதற்காக காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரையிலான 800 கி.மீ தூரத்தை 4 மணி நேரத்தில் பயணிக்கும் வகையில், புதிய இருப்புப்பாதை அமைக்கப்படுகிறது. மணிக்கு 200 கி.மீ வேகத்தில், 9 ரயில் பெட்டிகளுடன் 645 பயணிகள் இந்த ரயிலில் பயணிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டத்தை காங்கிரஸும் பாஜகவும் போட்டிப்போட்டுக் கொண்டு எதிர்க்கின்றன. பொதுவாக, இதுபோன்ற திட்டங்கள் வரும்போது கம்யூனிஸ்ட்கள் தான் போர்க்கொடி தூக்குவார்கள். ஆனால், இங்கே உல்டாவாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை எப்படிச் சமாளிக்கப் போகிறாரோ பினராயி!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in