சும்மாவிடுவாங்களா சுரேந்திரன்?

சும்மாவிடுவாங்களா சுரேந்திரன்?
சுரேந்திரன்

கடந்த முறை கேரள சட்டப்பேரவைத் தேர்தலின் போது மாநில பாஜக தலைவர் சுரேந்திரன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் கே.சுந்தராவுக்கு லஞ்சம் கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது. அப்போதே இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ய காசர்கோடு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அப்போது இதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்ட பினராயி அரசு, இப்போது ஜாமீனில் வரமுடியாத செக்‌ஷனில் குற்றப்புலனாய்வுத் துறை மூலம் சுரேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அண்மையில் நடந்த திருக்காக்கரைத் தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக விளாசினார் சுரேந்திரன். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே, எப்போதோ போன விவகாரத்தை இப்போது தூசு தட்டி வழக்குப் போட்டிருப்பதாகத் தடதடக்கிறது தாமரைக் கட்சி முகாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in