கடுப்பில் கருப்பு முருகானந்தம்

கடுப்பில் கருப்பு முருகானந்தம்
அண்ணாமலை, ரமேஷ் சகிதம் கருப்பு முருகானந்தம்


தெருவுக்கு பெயர் சூட்டும் விவகாரத்தில் திருவாரூரில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினரே எதிர்பார்க்காத அளவிற்கு கூட்டம் கூடியதைப் பார்த்த பிறகு கூடுதல் சந்தோஷத்தில் இருக்கிறாராம் அண்ணாமலை. ஆனால், ஏரியாவாசியான கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் செம கடுப்பில் இருக்கிறாராம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நாகை தொகுதி எம்பி-யாக இருந்தவர் எஸ்.ஜி. முருகையன். இவர் 1979-ம் ஆண்டு அரசியல் பகையில் படுகொலை செய்யப்பட்டார். இவரது மகன் ரமேஷ் அண்மையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். திருவாரூர் ஆர்ப்பாட்டத்துக்கு இவ்வளவு பெரிய கூட்டத்தை திரட்டிக் காட்டியதில் ரமேஷுக்கு பெரும்பங்கு இருக்கிறதாம். இதை பலரும் வெளிப்படையாக பேச ஆரம்பித்திருப்பதே கருப்புவின் கடுப்புக்கு காரணம் என்கிறார்கள். கூடிய விரைவில் ரமேஷுக்கு கட்சியில் கூடுதல் அந்தஸ்து கொடுக்கப்படலாம் என்ற பேச்சும் டெல்டா பக்கம் பலமாக அடிபட ஆரம்பித்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in