கார்த்திகேயனால் கலவரம் வரலாம்!

கார்த்திகேயனால் கலவரம் வரலாம்!
வசந்தம் கார்த்திகேயன்

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏ-வுமான வசந்தம் கார்த்திகேயன் மீது, ஏகக் கடுப்பில் இருக்கிறார்கள் கூட்டணி தோழர்கள். உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் முறையாக இடங்களை ஒதுக்கவில்லையாம். ஆவினில் பார்த்துக் கொள்ளலாம், கூட்டுறவில் பார்த்துக் கொள்ளலாம், சர்க்கரை ஆலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சாக்குப்போக்குச் சொன்னாராம். கடுப்பான காம்ரேட் ஒருவர், “சரி கார்த்தி... நீ அண்ணனுக்கு என்ன பதவி தரணும்னு நினைக்கிறியோ அதை அப்படியே உன்னோட லெட்டர் பேடுல எழுதிக் குடுத்துடு, அதுபோதும்” என்று கூலாகச் சொல்ல, மெர்சலாகிவிட்டாராம் வசந்தம். திமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட தேர்தல் அதிகாரிகளை நெருக்கும் கார்த்தியால், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை வரலாம் என மேலிடத்துக்குத் தகவல் அனுப்பியிருக்கிறதாம் உளவுத்துறை.

Related Stories

No stories found.