ஹாட் லீக்ஸ் - கைகூடுமா கரிக்கோல்ராஜ் கணக்கு?

ஹாட் லீக்ஸ் - 

கைகூடுமா கரிக்கோல்ராஜ் கணக்கு?
கரிக்கோல்ராஜ் பிரச்சாரம்

‘காமராஜர் நகர்மன்றத் தலைவராக இருந்த விருதுநகரை, தங்களுக்கே விட்டுத்தர வேண்டும்’ என ஒவ்வொரு முறையும் கூட்டணிக் கட்சிகளிடம் காங்கிரஸ் கட்சி போராடும். இந்தமுறை அதை ஏற்காத திமுக, மொத்தமுள்ள 36 வார்டுகளில் 11 வார்டுகளை மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்கியது. ஆனாலும் நகராட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற தீர்மானத்தில் இருக்கும் காங்கிரஸ்காரரும், நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளருமான கரிக்கோல்ராஜ், தனது மனைவியும் முன்னாள் சேர்மனுமான கார்த்திகாவை சுயேச்சையாக நிறுத்தி இருக்கிறார். இவரது மகனும் இன்னொரு வார்டில் போட்டியிடுகிறார். தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கும்போது, அனைத்துக் கட்சிகளிலும் உள்ள நாடார் சமூகத்து கவுன்சிலர்களை நாடார் மகாஜன சங்கம் மூலமாகப் பேசி, கார்த்திகாவுக்கு வாக்களிக்க வைத்துவிடலாம் என்பது கரிக்கோல்ராஜின் திட்டமாம். 2006-லும் இதே ஃபார்முலா படிதான், தனது மனைவி கார்த்திகாவை நகர்மன்ற தலைவராக்கினார் கரிக்கோல் ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.