
எந்த நேரத்தில் எப்படிப் பேசவேண்டும் என்ற நாகரிகத்தை அப்பாவைப் பார்த்து படித்தவர் என்று கனிமொழியைச் சொல்வார்கள். அந்த வகையில், அண்மையில் கோவில்பட்டியில் அவர் நடந்துகொண்ட விதம் அனைவராலும் வியக்கப்படுகிறது. கோவில்பட்டி அரசு கலை - அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்த கனிமொழி, அந்தக் கல்லூரி வருவதற்குக் காரணமானவர் இந்தத் தொகுதியின் எம்எல்ஏ-வான முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூதான் என்பதை மறக்காமல் குறிப்பிட்டதுடன், அதற்காக அவருக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார். கனிமொழி வருகிறார் என்பதாலேயே இந்த விழாவை புறக்கணித்த கடம்பூர் ராஜூ, இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு ரொம்பவே கூனிக் குறுகிப் போனாராம்.