கரைக்கும் காமராஜ்... கலங்கும் வைத்தி!

கரைக்கும் காமராஜ்... கலங்கும் வைத்தி!

தஞ்சை மாவட்ட அதிமுக மிக வேகமாக வைத்திலிங்கத்தின் கையைவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. போனவர்கள் போக வைத்தியைச் சுற்றி நிற்கும் மிஞ்சம் சொச்சம் அதிமுக வினரையும் ஈபிஎஸ் பக்கம் இழுப்பதற்காக தஞ்சையிலேயே ரூம்போட்டுத் தங்கி இருக்கிறார் திருவாரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான காமராஜ். வைத்திக்கு பக்க பலமாய் இருந்த பெருந்தலைகளை தங்கள் பக்கம் ஈர்த்துவிட்ட நிலையில், அடுத்தகட்டமாக ஒன்றியச் செயலாளர் தொடங்கி கிளைச் செயலாளர் வரைக்கும் தனித்தனியாக அழைத்து தாஜா செய்துவருகிறதாம் காமராஜ் தரப்பு. ‘கேட்டதெல்லாம் கிடைக்கும்; கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும்’ என்பதே காமராஜ் டீமின் டீலாக இருக்கிறது. இந்த இழுப்பு வேலைகள் ஒருபுறமிருக்க, தஞ்சை மாவட்டத்தில் கட்சிக்காரர்கள் இல்ல விழாக்களிலும் தவறாமல் ஆஜராகி வரும் காமராஜ், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தஞ்சை மண்டல அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in