தனி ரூட்டில் பெரியகருப்பன்!

சிவகங்கை பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம்...
சிவகங்கை பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம்...

மாவட்ட தலைநகரங்களில் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்பது திமுக தலைமைக் கழகம் போட்ட உத்தரவு. இதையடுத்து ஒரே நாளில் கடந்த 9-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட திமுக சார்பில் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. நகரம், ஒன்றியம் வாரியாக தனித்தனியாக நடத்தினால் கூட்டம் சேர்க்கமுடியாது என்பதால் மாவட்ட அளவிலேயே இந்தக் கூட்டத்தை நடத்தச் சொன்னது தலைமை. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலைமைக் கழகத்திலிருந்தே சிறப்புப் பேச்சாளர்களையும் பட்டியல்போட்டு அனுப்பினார்கள். அப்படியிருக்க, சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் இதை மாவட்ட கழக கூட்டமாக நடத்தாமல் சிவகங்கை நகர திமுக கூட்டமாக நடத்திவிட்டாராம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன். இதனால் மாவட்டத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் யாரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

தமிழரசியின் பெயர் இல்லாமல்...
தமிழரசியின் பெயர் இல்லாமல்...
தமிழரசி பெயருடன்...
தமிழரசி பெயருடன்...

இதில் இன்னொரு கூத்து என்னவென்றால், மாவட்டத்தின் இன்னொரு திமுக எம்எல்ஏ-வான முன்னாள் அமைச்சர் தமிழரசியின் பெயரையே போடாமல் இந்தக் கூட்டத்துக்கு துண்டுப் பிரசுரம் அடித்துக் கொடுத்தார்களாம். இதைப் பார்த்துவிட்டு தமிழரசி தரப்பு ஆவேசப்பட்டு கிளம்பிய பிறகே அவர் பெயரையும் போட்டு புதிதாக இன்னொரு துண்டுப் பிரசுரத்தை அடித்திருக்கிறார்கள். இப்போது இந்த இரண்டையுமே தலைமையின் கவனத்துக்குக் கொண்டு போயிருக்கிறாராம் தமிழரசி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in