அதிமுகவுக்கு வாக்களித்த மணப்பாறை திமுக!

கே.என்.நேரு, அன்பில் மகேஷ்
கே.என்.நேரு, அன்பில் மகேஷ்

திருச்சி திமுகவில் அமைச்சர் கே.என்.நேருவுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் இடையே நடக்கும் மறைமுக யுத்தத்தால், 53 ஆண்டுகளாக யாருக்கும் தராத மணப்பாறை நகராட்சியை அதிமுகவிடம் அள்ளிக் கொடுத்துவிட்டு நிற்கிறது திமுக. திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரான அன்பில் மகேஷின் ஆளுகைக்குள் இருக்கிறது மணப்பாறை. இங்குள்ள 27 வார்டுகளில் அதிமுகவும், திமுகவும் தலா 11 வார்டுகளை வென்றன. எஞ்சிய 5 வார்டுகளை திமுக சுயேச்சைகள் தட்டினார்கள். இருப்பினும் திமுக சுயேச்சைகள் 5 பேரிடமும் பக்குவமாய் பேசி அவர்களையும் திமுக கவுன்சிலர்களாக அங்கீகரிக்க வைத்தார் நேரு. இந்த நிலையில், நேருவின் ஆதரவாளரான கீதா மைக்கேல்ராஜை சேர்மன் வேட்பாளராக அறிவித்தது தலைமை. நியாயப்படி பார்த்தால் 16 வாக்குகள் பெற்று கீதா மைக்கேல்ராஜ் தான் சேர்மனாகி இருக்க வேண்டும். ஆனால் நேருவை நோஸ்கட் செய்வதாக நினைத்துக் கொண்டு திமுக கவுன்சிலர்கள் நான்கு பேரை அதிமுக பக்கம் திருப்பிவிட்டார்களாம். இதனால் 15 ஓட்டுகள் பெற்று அதிமுகவின் சுதா சேர்மனாகிவிட்டார். மாற்றி ஓட்டுப் போட்டது யார்... அவர்களை வழிநடத்தியது யார் என்பதை எல்லாம் விசாரிக்க மணப்பாறை திமுக கவுன்சிலர்களை கூண்டோடு திருச்சிக்கு அழைத்திருக்கிறாராம் நேரு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in