பதவிக்காகப் பாய்ந்தாரா ஜோதிமணி?

பதவிக்காகப் பாய்ந்தாரா ஜோதிமணி?

ராகுல் காந்தியை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்ததைக் கண்டித்து காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தவர் கரூர் எம்பி-யான ஜோதிமணி தான். சாதாரணமாகவே உரிமைக்காகப் போராடும் போராளிதான் என்றாலும் இந்த விஷயத்தில் சற்று கூடுதலாகவே மூர்க்கம் காட்டிவிட்டார் ஜோதிமணி. அதனால் அகில இந்திய ஊடகங்களில் பேசப்படும் நபராகிப் போனார். ஜோதிமணியின் இந்த மூர்க்கத்தனமான போராட்டத்துக்கான மூலம் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி என்கிறார்கள். தமிழக காங்கிரஸ் தலைவராக பெண்மணி ஒருவருக்கு வாய்ப்புக் கிடைக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. அப்படி வந்தால், விஜயதரணி அல்லது ஜோதிமணிக்கு தலைவராகும் வாய்ப்பு கிட்டலாம் என்கிறார்கள். இதையெல்லாம் கணக்கில் வைத்தே டெல்லியே கிடுகிடுக்கும் விதமாக போராடி ஒட்டுமொத்தமாக காங்கிரசையும் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தாராம் ஜோதிமணி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in