கொளுத்திப் போடும் கொங்கு கதர்ஸ்!

ஜோதிமணி
ஜோதிமணி

தமிழக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடித்து வரும் நிலையில், மாநில தலைவரும் மாற்றப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் கரூர் வந்திருந்த கே.எஸ். அழகிரி, “நிர்வாகிகள் மாற்றம் நிச்சயம் நடக்கும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு ஒரு பெண் தலைவராகலாம்” என்று சூசகமாகச் சொன்னார். அவர் எதைவைத்து இந்த ஆருடத்தைச் சொன்னாரோ தெரியவில்லை. ஆனால், “பாஜக தலைவர் அண்ணாமலை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருக்கு டஃப் கொடுக்க அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஆக்டீவ் அரசியல்வாதியான ஜோதிமணி எம்பி-யை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரா போடப் போறாங்க. அதைத்தான் அழகிரி அப்படி சொல்லாம சொல்லிருக்காரு” என்று கொளுத்திப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் கொங்குச் சீமை கதர் பார்ட்டிகள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in