எங்கே செல்லும் இன்பத்தமிழனின் பாதை!
இன்பத்தமிழன்

எங்கே செல்லும் இன்பத்தமிழனின் பாதை!

விருதுநகர் அரசியலில் தனது கடைசிக் காலம் வரை அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் தாமரைக்கனி. ஆனால், அவரது வாரிசுகள் கொஞ்சம் கொஞ்சமாக அவரது அரசியல் முகவரியைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். திமுகவில் இருந்த தாமரைக்கனியை சமாளிக்க அவரது 32 வயது மகன் இன்பத்தமிழனுக்கு அதிமுக மாவட்ட செயலாளர், அமைச்சர் பதவிகளை வாரி வழங்கினார் ஜெயலலிதா. அந்த அருமை புரியாமல், ஒருகட்டத்தில் திமுக பக்கம் சாய்ந்த இன்பத்தமிழன், மீண்டும் அதிமுகவுக்கே திரும்பினார். இடையில் கொலை வழக்கு ஒன்றில் சிக்கியவர் அமமுகவிலும் இருந்தார். அங்கேயும் தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் அதிமுகவில் தஞ்சமடைந்தார். தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர அதிமுக செயலாளராக இருக்கும் இன்பத்தமிழன், மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவிக்கு மனக்கோட்டை கட்டுகிறாராம். இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் இன்பத்தமிழனும், அவரது தம்பி ஆணழகனும் கவுன்சிலர் பதவிக்கு அதிமுக வேட்பாளர்களாக போட்டியிட்டார்கள். இருவருமே கரைசேரவில்லை. இதைவைத்து, “கவுன்சிலர் பதவிக்கே வரமுடியாதவர் எல்லாம் மாவட்ட செயலாளர் பதவிக்கு ஆசைப்படலாமா?” என்று கிண்டலடிக்கிறது விருதுநகர் மாவட்ட அதிமுக வட்டாரம்.

Related Stories

No stories found.