இன்னொரு ரவுண்டு வரும் இன்பத்தமிழன்!

இன்னொரு ரவுண்டு வரும் இன்பத்தமிழன்!
ரா.பா-வுடன் இன்பத்தமிழன்

சேலத்துச் சிங்கம் வீரபாண்டியாரை முகத்தில் குத்துவிட்ட இரா.தாமரைக்கனியைத் தெரிந்தவர்களுக்கு, அவரது மகன் இன்பத்தமிழன் 2001-06-ல் அதிமுக அமைச்சராக இருந்ததும் தெரிந்திருக்கும். அடுத்த தேர்தலில் சீட் கொடுக்காததால் திமுகவுக்குப் போனவர், மீண்டும் அதிமுகவுக்குத் திரும்பி, அமமுகவுக்குப் போய், மறுபடியும் 2019-ல் அதிமுகவிலேயே சேர்ந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவர் பதவிக்கான அதிமுக வேட்பாளர் இவர்தானாம். வார்டு கவுன்சிலர் பதவிக்கு இவரும், இவரது தம்பி ஆணழகனும் அதிமுக வேட்பாளர்களாக நிற்கிறார்கள். தனது தந்தை வகித்த பதவியை மீண்டும் பிடித்துவிட வேண்டும் என்று அதீத ஆர்வம் காட்டுகிறாராம் இன்பத்தமிழன். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் இவருக்கு ஆதரவாம். ஆனால், தாமரைக்கனிக்கே தண்ணி காட்டிய கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் அண்ணாச்சி அத்தனை எளிதில் இவர்களை ஜெயிக்கவிட்டுவிடுவாரா என்பதைக் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in